News April 29, 2024
கெஜ்ரிவால் மனைவிக்கு அனுமதி மறுப்பு

திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க, அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். டெல்லி அமைச்சர் அதிஷி இன்றும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நாளையும் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கவுள்ளனர். ஒரே நேரத்தில் 2 பேர் சந்திக்க விதிகள் இருந்தும், சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
Similar News
News February 19, 2026
உச்சம் தொட்ட பாண்ட்யா… புதிய சாதனை

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஹர்திக்கின் இடத்தை இன்னொருவர் நிரப்புவது கடினமே. அணி நெருக்கடியில் சிக்கும் போதெல்லாம் தனது பேட்டிங் அல்லது பவுலிங் மூலம் காப்பாற்ற அவர் தவறுவதில்லை. இந்நிலையில், டி20-யில் 200+ விக்கெட்களை வீழ்த்தி, 6,000 ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற மைல்கல் சாதனையை அவர் நேற்றைய போட்டியில் எட்டினார். உங்கள் பார்வையில் ஹர்திக் பாண்ட்யா எப்படி?
News February 19, 2026
யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்?

தேர்தல் நெருக்கத்தில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார் <<19183110>>பண்ருட்டி ராமச்சந்திரன்.<<>> TN-ன் மூத்த அரசியல்வாதியான இவர் (88 வயது) முதல்முறையாக 1967-ல் திமுக சார்பில் பண்ருட்டியில் வென்றார். பின்னர் கருணாநிதி, எம்ஜிஆர் ஆட்சிகளில் 4 முறை அமைச்சராக இருந்தவர், 2005 – 2013 வரை தேமுதிக அவை தலைவராகவும் பதவி வகித்தார். கடந்த சில ஆண்டுகளாக OPS-க்கு ஆதரவளித்து வந்த அவர், தற்போது புதிய கட்சிக்கு நகர்ந்துள்ளார்.
News February 19, 2026
தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) மீண்டும் 5,000 டாலர்களை கடந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து 1 அவுன்ஸ் 79 டாலர்களை தொட்டுள்ளதால் வரும் நாள்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமாக உயரக்கூடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்திய சந்தையில் இன்று(பிப்.19) <<19181398>>தங்கம் விலை ₹2,160<<>>, வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 அதிகரித்தது கவனிக்கத்தக்கது.


