News December 13, 2025
கடலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

கடலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் இம்மாதம்(டிச.31) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE SHARE பண்ணுங்க.!
Similar News
News December 22, 2025
கடலூர்: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது ?

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-இல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில்,<
News December 22, 2025
கடலூர் மாவட்டத்தில் 4,863 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து வேளாண்மை உதவி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஒன்றிணைந்து சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கணக்கெடுப்பு பணியின் நிறைவில் 4,406 ஏக்கர் நெற்பயிர்கள், 457 ஏக்கர் மக்காச்சோளமும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 22, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள், கூட்டறவு சங்கம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள், விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 25 பால் உற்பத்தியாளர்கள் அல்லது விவசாயிகள் ஒன்றிணைந்து, கூட்டுறவு சங்கம் அமைக்க செம்மண்டலத்தில் உள்ள கூட்டுறவு துணை பதிவாளர் (பால்வளம்) அலுவலகத்தை, தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.


