News December 13, 2025
சிகரெட்டை விட இது ரொம்ப டேஞ்சர்.. உடனே கவனியுங்க!

உடல் பருமனாக இருப்பதால், 13 வகையான புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மார்பகம், பெருங்குடல், எண்டோமெட்ரியம் (கருப்பையின் உட்புற திசு), உணவுக்குழாய், பித்தப்பை, இரைப்பை, சிறுநீரகம், கல்லீரல், கருப்பை, கணைய, தைராய்டு, எலும்பு மஜ்ஜை & மூளையில் உள்ள மெனிஞ்சியோமா ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படலாம் என்கின்றனர். எனவே, உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வெச்சிக்கோங்க!
Similar News
News December 19, 2025
5th T20: இந்தியா பேட்டிங்

5-வது மற்றும் கடைசி டி20-ல் டாஸ் வென்ற தெ.ஆப்பிரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியினர் பேட்டிங் செய்யவுள்ளனர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. தொடரை வெல்ல இந்தியாவும், தொடரை சமன் செய்ய தெ.ஆப்பிரிக்காவும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
News December 19, 2025
பார்லிமென்டில் கவனம் ஈர்த்த விவாதங்கள்!

குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. கடந்த 19 நாள்களாக நடைபெற்ற விவாதத்தில் MGNREGA vs VB G RAM G, இண்டிகோ விமான சேவை பாதிப்பு, SIR, வந்தே மாதரம் பாடல், திருப்பரங்குன்றம் தீபத்தூண், நெல் கொள்முதல், டெல்லி காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் கடும் விவாதங்களாக மாறின. இந்த பரபரப்புக்கு மத்தியிலும், மத்திய அரசு <<18613076>>8 மசோதாக்களை<<>> நிறைவேற்றியது கவனிக்கத்தக்கது.
News December 19, 2025
காலியிடம் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: மா.சு

பணி நிரந்தரம், மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று <<18609145>>MRB நர்ஸ்கள்<<>> போராட்டம் நடத்தினர். இந்நிலையில், காலியிடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒப்பந்த நர்ஸ்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும், இந்த அரசு யாரையும் கைவிடாது என்றும் கூறியுள்ளார்.


