News December 13, 2025
திருச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

திருச்சி மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!
Similar News
News December 22, 2025
திருச்சி மக்களே கடன் தொல்லையா? இத பண்ணுங்க

திருச்சி அருகே வயலூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும், ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது தனி சிறப்பாகும். மேலும் அருணகிரிநாதர் பாடிய தலமாகவும், திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோயிலில் முருகனை வழிபட்டால் கடன் தொல்லை, திருமண தடை உள்ளிட்டவை தீரும் என்பது நம்பிக்கை. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 22, 2025
மணப்பாறை முறுக்கு குறித்து மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

திருச்சி மாவட்டம், மணப்பாறையின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்கு தொழிலை மேம்படுத்தும் விதமாக, மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மணப்பாறையில் முறுக்கு உற்பத்தி கிளஸ்டர் அமைக்க வேண்டும் என, திமுக ராஜ்ய சபா எம்பி ராஜாத்தி சல்மா, மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சியை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கினார்.
News December 22, 2025
திருச்சி: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


