News December 13, 2025
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் புதிய திருப்பம்

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் கூடுதலாக மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஸ், எஸ்ஐ சிவக்குமார், காவலர் இளையராஜா ஆகிய 4 போரையும் எதிரிகளாக சேர்த்து குற்றப்பத்திரிகையை ஏற்கவேண்டும் என்று சிபிஐ தரப்பு நேற்று நீதிமன்றத்தில் கேட்டு கொண்டது. இதனை விசாரித்த நீதிபதி எம்.உதயவேலன் வழக்கு விசாரணையை டிச.19-க்கு ஒத்தி வைத்தார்.
Similar News
News March 13, 2026
BREAKING சிவகங்கை: 6 காவலர்கள் சஸ்பெண்ட்

மானாமதுரை அருகே தகராறு வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மானாமதுரை காவல் நிலைய ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்வாளர் குகன், காவலர்கள் தேவேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார், மனோகரன் ஆகிய 6 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
News March 13, 2026
சிவகங்கை மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

சிவகங்கை மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறுவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: shttps://coimbatore.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 13, 2026
BREAKING மானாமதுரை ஆகாஷ் உடலில் 28 காயங்கள்..!

மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த விவகாரத்தில், ஆகாஷ் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. வலது கால் நடுப்பகுதி தசை, முழங்கை, முழங்கால், மூளை அடிப்பகுதியில் ரத்த கசிவு, நுரையீரல் வீக்கம் உட்பட 28 இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தாக்குதலில் ஆகாஷ் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


