News December 13, 2025
ஒரே குடையில் கொண்டுவர PM மோடி திட்டம்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் கலைத்துவிட்டு ‘Viksit bharat shiksha adhikshak’என்ற ஆணையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் UGC, AICTE, NCTE, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட ஆணையங்களின் செயல்பாடுகள் இனி ஒரே ஆணையமாக செயல்பட உள்ளது. இதற்கான மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News December 24, 2025
டிசம்பர் 24: வரலாற்றில் இன்று

*1524 – வாஸ்கோடகாமா நினைவுநாள்.
*1973 – பெரியார் நினைவுநாள்.
*1978 – ரோபோ சங்கர் பிறந்தநாள்.
*1987 – எம்.ஜி.ஆர் நினைவுநாள்.
*1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காத்மாண்டு – டெல்லி இடையே கடத்தப்பட்டு ஆப்கனின் கந்தகார் நகரில் தரையிறக்கப்பட்டது.
News December 24, 2025
கேமரா போனை பயன்படுத்த பெண்களுக்கு தடை

கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் போன்களை பெண்கள் பயன்படுத்தக்கூடாது என ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கீபேட் மொபைலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பெண்கள் போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் பார்வைத்திறன் குறைவதால் இந்த முடிவு என கிராமத்தினர் கூறுகின்றனர். இந்த நடைமுறை ஜன.26 முதல் அமலுக்கு வருகிறது. உங்கள் கருத்து என்ன?
News December 24, 2025
டிகிரியை வைத்து ஒன்றும் செய்திட முடியாது: கமல்

திருச்சியில் PEFI & கமல் பண்பாட்டு மையம் விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், விளையாட்டிலும், சினிமா தியேட்டரிலும் தான் சாதி ஒழிந்துள்ளது என்றார். விளையாட்டு வீரர்களும், இளைஞர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வெறும் டிகிரியை வைத்து ஒன்றும் செய்துவிட முடியாது என்ற கமல், அரசியல் விளையாட்டையும் ஆடிப் பார்க்க வேண்டும் என கூறினார்.


