News December 13, 2025
வேலூர்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

வேலூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க
Similar News
News March 3, 2026
வேலூரில் சர்க்கரை நோய்க்கு இலவச சிகிச்சை!

வேலூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். உடனடி இலவச சிகிச்சை அளிக்கப்படும். SHARE பண்ணுங்க!
News March 3, 2026
வேலூரில் 207 போலீசாருக்கு ப்ரோமோஷன்!

காவல்துறையில் பணியாற்றக்கூடிய போலீசாருக்கு பதவிக்காலம் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2013-ல் பணியில் சேர்ந்த 169 பேர் முதல் நிலை காவலரில் இருந்து தலைமைக் காவலராகவும், 2016-ல் சேர்ந்த 38 பேர் 2-ம் நிலை காவலரில் இருந்து முதல் நிலை காவலராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 207 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
News March 3, 2026
அணைக்கட்டில் பாமக முக்கிய ஆலோசனை!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு (மேற்கு) ஒன்றியம் நேமந்தபுரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று (மார்ச்.2) வாக்குச்சாவடி திருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு தேர்தல் பணிகளை குறித்து பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


