News December 13, 2025

குமரியில் தொழிலாளி சடலமாக மீட்பு!

image

ஈசாந்திமங்கலம் ஞானதாசபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (57). பல தோப்புகளில் மரத்தில் இருந்து தானாக விழும் தேங்காயை எடுத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (டிச.12) காலையில் சீதப்பால் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிந்து அவர் எப்படி இறந்தார்? வேறு எதும் காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 8, 2026

குமரி: விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

image

கருங்கல் அருகே பாலூர் கிளி மூக்கு விளைபகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). கொத்தனாரான இவர் நேற்று காலை வீட்டில் பூச்சி கொல்லி மருந்தை எடுத்துக் குடித்தார். இதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

News March 7, 2026

குமரி: குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்துக்குட்பட்ட தெரிசனங்கோப்பு பகுதியில் உள்ள ஆற்றில் இன்று மதியம் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

News March 7, 2026

குமரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

குமரி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!