News December 13, 2025
சென்னை: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க
Similar News
News March 5, 2026
விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் – ஜெயக்குமார்

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது விஜய் தன்னைப் போல பத்திரிகையாளர்களை சந்தித்து கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும், எழுதிக் கொடுக்கப்பட்டதை வாசிப்பது போதாது என்றார். அரசு பணத்தை திமுக அதிகமாக செலவிட்டாலும் வரும் தேர்தலில் தோல்வியடையும் என்றும், 5 ஆண்டுகளாக சிறுபான்மையின மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்ந்துள்ளது என கேள்வி எழுப்பினார்.
News March 4, 2026
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா?

பார்வதி தேவி சிவனிடம் திருநீறு பற்றி விளக்க கேட்க, சிவன் விளக்கமளித்தார். அங்கு மயில் ஆடுவதை பார்க்க, சிவன், ‘நீ மயில் உருப்பெற்றிடுவாய்’ என பார்வதிக்கு சாபமிட்டார். இங்கு புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை தேவி வழிபட்டதால் சாபம் நீங்கியது. இது மயிலை என்றானது. இங்கு ஈசனை வழிபடுவோருக்கு மன நிம்மதி கிடைப்பதுடன், உடல் சார்ந்த எந்த நோயாக இருந்தாலும் இங்கு வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை. ஷேர்!
News March 4, 2026
சென்னையில் ரயில் பெட்டி கண்காட்சி

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலை (ஐசிஎஃப்) வளாகத்தில் மார்ச் 12 முதல் 14 வரை மூன்று நாட்கள் சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 125 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ரயில் பெட்டி தயாரிப்பு தொழில்நுட்பம், புதிய மாதிரிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற உள்ளன.


