News December 13, 2025
தஞ்சாவூர்: மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

கபிஸ்தலத்தில் அரசுப் பள்ளியின் ஆசிரியரான முருகன் என்பவர் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். தன்னிடம் டியூஷன் படிக்கும் 16 வயது சிறுமியிடம் ஆபாசமாகப் பேசி, பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், ஆசிரியர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 16, 2025
தஞ்சை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

தஞ்சை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 16, 2025
தஞ்சை: BE போதும் அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க
News December 16, 2025
தஞ்சாவூர்: சாலை விபத்தில் தலைநசுங்கி ஒருவர் பலி

தஞ்சாவூர் மாட்டு மேஸ்திரி சந்து பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறி பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கியபோது, அங்கு வந்த மினி பேருந்து அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


