News December 13, 2025
அரவக்குறிச்சி: மயங்கி விழுந்து பெண் மரணம்!

கரூர், அரவக்குறிச்சி 4 ரோட்டில் பாப்பாத்தி என்பவர் சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல்நிலை சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
கரூர்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

கரூர் மாவட்ட மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே<
News December 16, 2025
கரூரில் ரூ.2 ஆயிரம் வாங்கியதற்கு 3 ஆண்டு சிறை!

கரூரில் மின் கம்பம் நடுவதற்கு கடந்த 2011ம் ஆண்டு (14 ஆண்டுகளுக்கு முன்பு) சுந்தர்ராஜன் என்பவரிடம் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய உதவி பொறியாளர் நாராயணன் என்பவருக்கு, 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
News December 16, 2025
கரூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் முதியோர் நலனுக்காக உதவி எண்” (14567)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண் முதியோர் மற்றும் அவர்களின் நலவாழ்வுக்கான தகவல், வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் தலையீட்டு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும். மூதியோரின் பாதுகாப்பும் நலனும் கருதி, எந்த நேரத்திலும் இந்த எண்ணை அழைத்து உதவியை பெறலாம்.


