News December 13, 2025
கிருஷ்ணகிரி: விபத்தில் துடிதுடித்து பலி!

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியைச் சேர்ந்த கணேசன் என்பவர், சூளகிரி அருகே உள்ள பொன்னால் நத்தம் என்று ஊரில் தனியார் கிரஷர் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். நேற்று (டிச.12 ) இரவு தனது ஊரிலிருந்து வேலைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார் அப்போது, எரண்டபள்ளி கிராமம் அருகே சாலையில் அதிவேகமாக வந்ததால் நிலை தடுமாறி ஒரு வீட்டின் மதில் சுவரில் இடித்து விழுந்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
Similar News
News March 6, 2026
கிருஷ்ணகிரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் ஒரு பகுதியாக கனவுகள் மெய்ப்படும் என்ற தலைப்பில் சென்னை வர்த்தக மையத்தில் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ-க்கள், எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.
News March 6, 2026
கிருஷ்ணகிரியில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <
News March 6, 2026
கிருஷ்ணகிரி: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

கிருஷ்ணகிரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். *கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க*


