News December 13, 2025
TN-ல் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா? R.S.பாரதி

அதிமுகவினர் திமுகவுக்கு போவார்களா, நடிகர் கட்சிக்கு போவார்களா என்ற குழப்பத்தில் EPS இருப்பதாக R.S.பாரதி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்காக 8 முறை PM மோடி, தமிழகம் வந்தும் எதுவும் எடுபடவில்லை; அதேபோல், அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும், எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என்று கூறிய அவர், SIR நடவடிக்கையால் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2026
பெண்களுக்கு 5 ஏக்கர் நிலம் தரும் திட்டம் பற்றி தெரியுமா?

விவசாய கூலிகளாக இருக்கும் SC, ST வகுப்பை சேர்ந்த பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’. இதன்கீழ் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்கலாம். இதற்கு தேவையான கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. இதற்கு ஆன்லைனில் <
News March 1, 2026
பரிதாப நிலையில் தமிழ் நடிகை.. உயிருக்கு போராட்டம்

காதல், அரவான், உடன்பிறப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்த ‘காதல்’ மல்லேஸ்வரி, கடும் நுரையீரல் தொற்றால் சென்னை ஓமந்தூரார் அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். கவனிக்க ஆளின்றி தனியாக இருக்கும் அவர், ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மூச்சுவிட முடியாமல் அவதிப்படுவதாகவும், சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.
News March 1, 2026
கமேனியின் கொலைக்கு பழிவாங்குவது கடமை: ஈரான்

உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் கொலைக்கு பழிவாங்குவது, ஈரானின் சட்டபூர்வமான உரிமை மற்றும் கடமை என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். கமேனியின் படுகொலை என்பது உலகில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான, குறிப்பாக ஷியா பிரிவினருக்கு எதிரான வெளிப்படையான போர் அறிவிப்பு என்றும், இந்த வரலாற்று குற்றத்தைச் செய்தவர்களை பழிவாங்குவது தனது கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.


