News December 13, 2025
கரூர்: வாடகை வீட்டில் இருக்கிறீர்களா??

கரூர் மாவட்டத்தில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க!)
Similar News
News December 16, 2025
கெட்டுப்போன மிட்டாய் கரூர் பெற்றோர்களே உஷார்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பகுதியில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் முத்து என்பவர் குடை மிட்டாய் வாங்கியுள்ளார். அதில் புழு வண்டுகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்து உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரி கெட்டுப்போன மிட்டாய் வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூபாய் 2000 அபராதம் விதித்தார். மேலும் பல்வேறு கடைகளில் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது!
News December 16, 2025
கரூர்: மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 27 டிசம்பர் 2025 அன்று அரசு கலைக்கல்லூரி, தாந்தோணிமலையில் நடைபெறும். கலந்துகொள்ள விரும்புவோர் கீழ்கண்ட படிவத்தில் விவரங்களை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
News December 16, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்டத்தில் சுமார் 8381 ஹெக்டர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது தென்னை மரங்களை இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு பயிர் காப்பீடு செய்வது அவசியமாகும். மேலும் இது தொடர்பாக தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் அறிவித்துள்ளார்.


