News December 13, 2025

திருச்சி: 4370 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கல்

image

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், 4370 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 27, 2025

திருச்சி: து.குடியரசு துணைத் தலைவர் வருகை – ஆட்சியர் தடை

image

இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் டிச.29 ஆம் தேதி திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்கள் காரணமாக அன்றைய தினம் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 27, 2025

திருச்சி: அதிமுக பெண் நிர்வாகி தற்கொலை

image

திருச்சி மாவட்டம், நவல்பட்டு பர்மா காலனியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணியின் துணைச் செயலாளரான இவர், கணவனைப் பிரிந்து மகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மகளுடன் எழுந்த பிரச்சனையின் காரணமாக மனமுடைந்த ஜெயந்தி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 26, 2025

திருச்சி: எமதர்மனுக்கு உயிர் கொடுத்த ஞீலிவனேசுவரர்!

image

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் இறந்த எமதர்மராஜனுக்கு இறைவன் மீண்டும் உயிர் கொடுத்து, அதிகாரத்தைத் திரும்பளித்த கோயில் இது என்று கூறப்படுகிறது. மேலும் இக்கோயிலில் சனீஸ்வரனுக்கு அதிபதியான எமன் சந்நிதி இருப்பதால் நவகிரகங்கள் கிடையாது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!