News December 13, 2025
தூத்துக்குடி: மாடியில் குதித்து பெண்ணிடம் செயின் பறிப்பு

தெற்கு இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி மனைவி பூமாடத்தி (30). இவர் நேற்று இரவு 8 மணி அளவில் வீட்டின் வெளியே வருகையில், அவர்கள் வீட்டு மாடியில் இருந்த திருடன், அங்கிருந்து குதித்து பூமாடத்தி கழுத்தில் கிடந்த இரண்டரை பவுண் செயினை பறித்து சென்றான். இந்த செயின் பறிப்பு சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் டிச.18 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்றைய இரவு ரோந்து போலீஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.