News December 13, 2025

புதுவை: மீன் வலையில் சிக்கிய பெலிக்கான் பறவை

image

புதுச்சேரி, ஊசுட்டேரியில் நேற்று பெலிகான் பறவை (கூழைக்கடா) ஒன்று மீன் வலையில் சிக்கி தண்ணீரில் தத்தளிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் ஏரியில் மீன் வலையில் சிக்கி தவித்த பெலிக்கான் பறவையை மீட்டு, மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு வனத்துறை மருத்துவர் குமரன் பறவைக்கு சிகிச்சை அளித்தார்.

Similar News

News December 22, 2025

புதுவை: போலீஸ் அடித்தால் புகாரளிப்பது எப்படி?

image

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது தகுந்த ஆதாரங்களுடன், <>hrcnet.nic.in என்ற இணையதளம்<<>> மூலமாக மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட், கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…

News December 22, 2025

புதுவையில் மின்சாரம் தாக்கி பிளம்பர் பலி

image

நெல்லித்தோப்பு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிளம்பர் சஞ்சய்(21). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(23) என்பவரும், நெல்லித்தோப்பு செங்கேணியம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் பிளம்பிங் வேலை செய்ய நேற்று முன்தினம் சென்றுள்ளனர். அப்போது மதியம் விக்னேஷ் பொருட்கள் வாங்க கடைக்கு சென்று திரும்பிய போது, சஞ்சய் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 22, 2025

புதுவை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

image

புதுவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தவும், விடுபட்டோரையும் புதிய வாக்காளர்களையும் சேர்க்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கின்றன. இம்முகாம்கள் வாக்குச்சாவடி மையங்களில் வருகிற டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும். இந்நாட்களில் புதிய வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!