News December 13, 2025
பெரம்பலூர்: டிராவல்ஸ் நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம்

பெரம்பலூரை சேர்ந்த அமரஜோதி என்பவர் சென்னை செல்வதற்காக மொபைல் செயலி மூலம், தனியார் டிராவல்ஸ் பேருந்தை புக் செய்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் பேருந்து வராததால் வேறு பேருந்தில் சென்ற நிலையில், அன்று பணிக்கு விடுப்பு எடுக்கும் நிலமையானது. இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து தனியார் டிராவல்ஸ் பயணிக்கு ரூ.50,000, மனு செலவிற்கு ரூ.10,000 வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News March 4, 2026
பெரம்பலூர்: இ-சேவை மையம் தொடங்க அரிய வாய்ப்பு

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள்<
News March 4, 2026
பெரம்பலுர்: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 4, 2026
பெரம்பலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.


