News December 13, 2025
புதுக்கோட்டை: தப்பி ஓடிய சிறை கைதியை பிடிக்க 4 தனிப்படை!

கறம்பக்குடியில் பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா காமாங்கா என்ற இளைஞர், சிறுமி ஒருவரை பாலியல் வண்புணர்வு செய்த சம்பவத்தில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு. சிறையில் அடைக்க அழைத்து சென்றபோது போலீசிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்திரவிட்டாள்ளார்.
Similar News
News December 18, 2025
புதுகை: வாக்கு பதிவு இயந்திரங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறை அமைந்துள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (டிச.18) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News December 18, 2025
புதுக்கோட்டை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

புதுகை மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
புதுக்கோட்டை: வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வேலை

தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 52
3. வயது: 21 – 41
4. சம்பளம்: ரூ.5,200 – ரூ.28,200
5. கல்வித் தகுதி: 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 20.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


