News December 13, 2025
திருப்பூர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

திருப்பூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Similar News
News March 6, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

கோடைக்காலத்தை எதிர்கொள்ள ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நிலத்தடி நீர் உயர நடவடிக்கை எடுக்கவும், பல்லடம் 4 வழிச்சாலை பணியில் சேதமான குடிநீர் குழாய்களை உடனே மாற்றவும், கிணறுகள்-நீர்நிலைகளை தூர்வாரி பழுதான குழாய் இணைப்புகளை சரிசெய்யவும் உத்தரவிட்டார்
News March 6, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (மார்.05) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 5, 2026
கோடைகால குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வராணி, ஊராட்சிகள் துறை உதவி இயக்குனர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.


