News April 29, 2024
T20 WC-கான நியூசி., அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம்சன் (C), ஆலன், போல்ட், பிரேஸ்வெல், சாப்மேன், கான்வே, பெர்குசன், ஹென்றி, மிட்செல், நீஷம், பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, சான்ட்னர், சோதி, சவுத்தி ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதில் நட்சத்திர வீரர்களாக இருக்கும் வில்லியம்சன், ரச்சின், கான்வே அவுட் ஆஃப் பார்மில் இருக்கின்றனர். இது, அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
Similar News
News February 1, 2026
மயிலாடுதுறை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

மயிலாடுதுறை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News February 1, 2026
செமி கண்டக்டர் மிஷன் 2.0 திட்டத்துக்கு ₹40,000 கோடி

இந்தியாவை உலகளாவிய உயிரி மருந்து உற்பத்தி மையமாக மேம்படுத்த, ‘பயோ பார்மா சக்தி’ திட்டத்தை அறிமுகப்படுத்தி ₹10,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார் FM நிர்மலா சீதாராமன். இது உயிரியல் மற்றும் உயிரி மருந்துகளின் உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்யும் சூழலை உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், Semi Conductor Mission 2.0-வுக்காக ₹40,000 கோடியை அவர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
News February 1, 2026
சிகரெட் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 40% GST வரி உயர்வுடன் சிகரெட், பான் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, சாதாரண சிகரெட் (65 mm) ₹2.10, Medium சிகரெட் (70mm) ₹4, பிரீமியம் சிகரெட் (75 mm) ₹5.40 வரை விலை உயர்ந்து விற்பனையாகலாம் என கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் புகை பிடிப்போர் கலக்கம் அடைந்துள்ளனர். (ADVISORY: சிகரெட் புகைக்காதீர்)


