News December 13, 2025
திருச்சி – காரைக்கால் இடையே வழக்கம் போல் ரயில் இயக்கம்!

திருச்சி – காரைக்கால் இடையே இயக்கப்படும் டெமுரெயில் (வண்டி எண் : 76820) வருகிற 14, 16 மற்றும் 18ஆம் தேதிகளில் தஞ்சாவூர்- காரைக்கால் இடையே பகுதியாக இயங்காது என அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த ரெயில் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்க மாக காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்படும் டெமு ரெயில் (வண்டி எண்: 76819) மேற்கண்ட நாட்களில் வழக்கமான அட்டவணைப்படியே இயங்கும்.
Similar News
News December 17, 2025
திருச்சி: டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை!

இந்திய ரயில்வே கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்பட்சம் 40
4. சம்பளம்: ரூ.16,338 – ரூ.29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <
8. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 17, 2025
திருச்சி: 2 நாட்களுக்கு ரயில் ரத்து!

காரைக்குடி – திருச்சி பயணிகள் ரயில் 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காரைக்குடி – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயிலானது வரும் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காரைக்குடியில் இருந்து குமாரமங்கலம் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 17, 2025
திருச்சி: கரண்ட் இல்லையா? கவலை வேண்டாம்!

திருச்சி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 15 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


