News April 29, 2024
வெள்ளியங்கிரி மலை: மேலும் ஒருவர் உயிரிழப்பு

தென் கைலாயம் எனப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் அடிவாரத்திலிருந்து மலையேற துவங்கியுள்ளனர். அப்போது, அவர்களில் புண்ணியகோடி என்பவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரை மீட்ட நண்பர்கள் பூலுவபட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 23, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (23.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 23, 2025
கோவையில் இலவச டெய்லர் பயிற்சி

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச டெய்லர் பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. 40 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், டெய்லரிங் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, <
News August 23, 2025
கோவைக்கு நாளை வருகிறார் அமைச்சர் கே.என்.நேரு.!

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நாளை (24.08.2025) கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு காந்திபுரம் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு செய்து, 11.35 மணிக்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் ரூ.21.55 கோடி மதிப்பில் புதுப்பிப்பு பணிகளைத் தொடங்குகிறார் என திமுக மா. செயலாளர் நா. கார்த்திக் தெரிவித்துள்ளார்.