News December 13, 2025
திமுக, அரசு மீது விமர்சனங்கள் உண்டு: திருமாவளவன்

கட்சி தொடங்கிய உடன் சிலர் CM கனவு காண்பதாக விஜய்யை திருமாவளவன் மறைமுகமாக சாடியுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், திமுக மீதும், அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உள்ளது. ஆனால், வலதுசாரிகளுக்கு இங்கே சிவப்புக் கம்பளம் விரிக்க முடியாது எனவும், இடைக்கால தேவைக்காக அணி மாறிவிட முடியாது என்றும் கூட்டணி குறித்தான மறைமுக விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
Similar News
News December 26, 2025
காலையில் இந்த மூலிகை தேநீர் குடிங்க.. அவ்வளோ நல்லது

ஃபோலிக் ஆசிட் உள்ளதால், கர்ப்பிணிகளுக்கு ஓமம் தேநீர் மிகவும் நல்லது என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் செரிமானம் மேம்படவும் இது உதவுமாம். ➤நீரில் கிரீன் டீயை கலந்து நன்கு கொதிக்க வைக்கவும் ➤அதில், ஓமத்தை சேர்த்து தண்ணீர் பாதியாக சுண்டும் வரை நன்றாகக் கொதிக்க விடுங்கள் ➤அந்த தண்ணீரை வடிகட்டி தேன் சேர்த்தால், சத்தான ஓமம் தேநீர் ரெடி. SHARE IT.
News December 26, 2025
FLASH: தவெகவில் விஜய் எடுத்த புதிய முடிவு

தவெகவில் உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது விஜய்க்கு புது தலைவலியை கொடுத்துள்ளது. இந்நிலையில், மா.செ.,க்களை கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மா.செ.,க்கள் தாங்கள் தினமும் மேற்கொள்ளும் பணிகளை மா.பொ.,க்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டுமாம். இதற்காக வருவாய் மாவட்ட வாரியாக மா.பொ.,க்கள் நியமிக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
News December 26, 2025
REWIND: சுனாமி பேரலை 8,000 தமிழர்களை கொன்ற நாள்!

ஆழிப்பேரலை(Tsunami) கொத்து கொத்தாக மக்களை கொன்று குவித்த துயரத்தின் 21-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 2004-ம் ஆண்டு இதே நாளில் கடற்கரை ஓரங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடியவர்கள் உள்பட 7,993 பேர் உயிரிழந்தனர். தாய், தந்தை, மனைவி, அக்கா, தம்பி, பிள்ளைகள் என உறவுகளை இழந்தவர்கள் இன்னும் அந்த துயரிலிருந்து மீளாமல் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.


