News December 13, 2025
FLASH: SBI வங்கி கடன் வட்டி விகிதத்தை குறைத்தது

<<18475076>>RBI ரெப்போ வட்டி<<>> விகிதத்தை குறைத்ததை தொடர்ந்து SBI வங்கி தனது கடன் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. அதன்படி MCLR விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.70% ஆனது. மேலும், 2-3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.40% மற்றும் 444 நாட்களுக்கான FD வட்டி விகிதத்தை 6.45% குறைத்துள்ளது. இது வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
Similar News
News December 18, 2025
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குக: CM ஸ்டாலின்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரால் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக் கோரி, CM ஸ்டாலின் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கலைஞர் பல்கலை., விளையாட்டு பல்கலை., மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குமாறும் ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை ஜனாதிபதியின் செயலரிடம் டி.ஆர்.பாலு உள்ளிட்ட INDIA கூட்டணி MP-க்கள் வழங்கினர்.
News December 18, 2025
EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

கோபியில் அதிமுக உள்ளிட்ட பிற கட்சி நிர்வாகிகளை தவெகவில் இணைக்கும் பணிகளை செங்கோட்டையன் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, கோபி தொகுதியில் அதிமுகவை பலப்படுத்த EPS முனைப்பு காட்டி வருகிறார். உழவர் உழைப்பாளர் கட்சியின் மகுடேஸ்வரன் உள்பட கோபி தொகுதியில் இருந்து, 75-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். தேர்தல் பணிகளில் முழுவீச்சில் செயல்படுமாறு அவர்களுக்கு EPS அறிவுறுத்தியுள்ளார்.
News December 18, 2025
பனித்துளி பூவே ப்ரீத்தி அஸ்ராணி

‘அயோத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ப்ரீத்தி அஸ்ராணி, தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதில், பனித்துளிகளில் மலர்ந்த பூவாக மின்னுகிறார். அவரது, நீளமான இமைக்கீழ் ஒளிந்திருக்கும் பார்வை, சொல்லாத கதை சொல்லுகிறது. அவரது போஸ், கவிதை பேசும் கண்கள் கொண்ட உயிருள்ள ஓவியம் போன்று இருக்கிறது. இந்த போட்டோக்கள் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


