News December 13, 2025

திருவள்ளூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

திருவள்ளூர் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

Similar News

News December 16, 2025

ஆவடியில் இன்றைய ரோந்து காவலர்களின் எண்கள்!

image

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் இன்று (டிச.16) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை தீவிர இரவு ரோந்து நடைபெற உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் ரோந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவசர சூழ்நிலையில் தொடர்பு கொள்ள காவல் துறை வெளியிட்ட ரோந்து எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

News December 16, 2025

ஆவடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ஆவடி மாநகராட்சியில் (டிச.20) காலை 8 முதல் மாலை 3 மணி வரை மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில்
8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். 130க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு
https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்திலும் மற்றும் 044 – 27660250 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News December 16, 2025

மாணவர் மரணத்திற்கு முதலமைச்சர் இரங்கல் மற்றும் நிதி உதவி

image

ஆர்கே பேட்டை ஒன்றியம் அம்மனேரி அடுத்த கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவர் மோகித் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் மிகுந்த வருத்தத்தையும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். ‌மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!