News December 13, 2025
கரூர் மகளிருக்கு ரூ.1000 ? எம்எல்ஏ GOOD NEWS

கரூர் அருகே தனியார் கலையரங்கில், பெண் களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கும் விரி வாக்க விழா நடந்தது. அதில், உரிமை தொகைக் கான ஆணைகளை கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பெண்களுக்கு வழங்கினார். தற்போது கரூர் மாவட்டத்தில் 1,89,383 பெண்கள் மகளிர் உரிமை தொகை பெறுவதாக அவர் கூறினார்.இவ்விழாவில், கலெக்டர் தங்கவேல் உடன் இருந்தார்..உங்களுக்கு இந்தத் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை கிடைத்ததா?
Similar News
News December 16, 2025
கரூரில் ரூ.2 ஆயிரம் வாங்கியதற்கு 3 ஆண்டு சிறை!

கரூரில் மின் கம்பம் நடுவதற்கு கடந்த 2011ம் ஆண்டு (14 ஆண்டுகளுக்கு முன்பு) சுந்தர்ராஜன் என்பவரிடம் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய உதவி பொறியாளர் நாராயணன் என்பவருக்கு, 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
News December 16, 2025
கரூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் முதியோர் நலனுக்காக உதவி எண்” (14567)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண் முதியோர் மற்றும் அவர்களின் நலவாழ்வுக்கான தகவல், வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் தலையீட்டு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும். மூதியோரின் பாதுகாப்பும் நலனும் கருதி, எந்த நேரத்திலும் இந்த எண்ணை அழைத்து உதவியை பெறலாம்.
News December 16, 2025
கரூர்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

கரூர் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய எளிய வழி. உங்கள் போனில் TamilNilam Geo-Info என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் தொடர்பு எண்ணை பதிவு செய்யவும். பின் நிலம் இருக்க கூடிய மாவட்டம், வட்டம், கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து நிலத்தின் பட்டா விவரம், FMB, லொக்கேஷன் உள்ளிட்ட பல விவரங்களையும் அறிய முடியும். யாருக்காவது தேவைப்படும் SHARE பண்ணுங்க!


