News December 13, 2025

பரமக்குடி: முதியவர்களை கொன்ற குற்றவாளிக்கு குண்டாஸ்

image

பரமக்குடி எமனேஸ்வரம் பகுதி வளையனேந்தல் கிராமம் வைகை ஆற்றுப்படுகையில் வேலுச்சாமி, லட்சுமணன் ஆகிய முதியவர்கள் மது அருந்தியதை கண்டித்த தகராறில் நவ., 17ல் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதில் அலெக்ஸ்பாண்டி 26, நவ.,18ல் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

Similar News

News December 19, 2025

ராமநாதபுரத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகின்ற 02.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை அளித்தும் அதற்குப் பதிலாக 10.01.2026 அன்று சனிக்கிழமையினை பணி நாளாக அறிவித்தும் கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

News December 19, 2025

ராமநாதபுரம்: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

image

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News December 19, 2025

பரமக்குடி: பஸ் கண்டக்டருக்கு ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு

image

பரமக்குடியை சேர்ந்தவர் மயில்பாண்டியன் 28. அரசு டவுன் பஸ் கண்டக்டர். தற்போது மானாமதுரையில் வசிக்கிறார். நேற்று மானாமதுரையில் இருந்து பரமக்குடி சென்ற டவுன் பஸ்ஸில் பணியில் இருந்தார். இரவு 7:30 மணிக்கு விஜயன்குடி ரைஸ்மில் பஸ் ஸ்டாப் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது டூவீலர்களில் வந்த 3 பேர் பஸ்சை நிறுத்தி மயில்பாண்டியை ஒட ஒட அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்து சிவகங்கை GH-யில் சிகிச்சை பெறுகிறார்.

error: Content is protected !!