News December 13, 2025
இந்தியா மீதான டிரம்ப்பின் வரியை நீக்க தீர்மானம்

இந்திய பொருள்கள் மீது டிரம்ப் விதித்த 50% வரியை முடிவுக்கு கொண்டுவர, US பிரதிநிதிகள் சபையின் 3 உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த வரியை சட்டவிரோதமானது எனக்கூறிய டெபோரா ராஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி(இந்திய வம்சாவளி), இதனால் USA தொழிலாளர்கள், நுகர்வோர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். வரியை நீக்கினால் இருநாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு வலுப்பெறும் எனவும் கூறினர்.
Similar News
News December 19, 2025
ஓமனுடன் பொருளாதார ஒப்பந்தம் கையெழுத்து

ஓமன் சென்றிருந்த PM மோடி அந்நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே விரிவான பொருளாதார நல்லுறவுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி வர்த்தக தடைக்கான விசயங்களை குறைப்பது, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஆதரவளிப்பது, இருதரப்பு பொருளாதாரத்தை ஊக்குவிப்பது உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கமாகும்.
News December 19, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News December 19, 2025
மெஸ்ஸி நிகழ்ச்சி: ₹50 கோடிக்கு கங்குலி அவதூறு வழக்கு

கொல்கத்தாவில் கலவரமாக மாறிய மெஸ்ஸியின் நிகழ்ச்சிக்கு, கங்குலி இடைதரகராக செயல்பட்டதாக AFCK தலைவர் உத்தம் சஹா கூறியிருந்தார். இந்நிலையில் தனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவலை சஹா பரப்பியதாக கூறி, கங்குலி ₹50 கோடிக்கு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிகழ்விற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஒரு விருந்தினராக மட்டுமே கலந்து கொண்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


