News December 13, 2025

தி.மலை: நிலத்தகராற்றில் விவசாயி நாக்கு கடித்து அறுப்பு!

image

விநாயகபுரத்தை சேர்ந்த விவசாயி ஜோதிபிரகாஷ் தனது நிலத்தில் வரப்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ​​அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர், நிலத்தகராறு காரணமாக ஜோதிபிரகாஷை மண்வெட்டியால் தாக்கி, அவரது நாக்கைக் கடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த ஜோதிபிரகாஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பெயரில் சங்கீதாவை கைது செய்தனர்.

Similar News

News December 16, 2025

தி.மலை: பால் லாரி மோதி கோர விபத்து; சம்பவ இடத்திலேயே பலி

image

சென்னையை சேர்ந்த சந்தோஷ்குமார்(38), கார்த்திக்(35), முனிவேல் (36) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் பருவதமலைக்கு சென்றனர். அப்போது, சேத்துப்பட்டு அருகே கோழிப்புலியூர் கூட்ரோடு பகுதியில் சென்றபோது எதிரே வந்த பால் லாரி இவர்கள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில், சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கார்த்திக், முனிவேல் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

News December 15, 2025

தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

தி.மலை, இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இரவு வேலைக்கு செல்லும் ஆண், பெண்களுக்கு உதவும்.

News December 15, 2025

தி.மலையில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவரா நீங்கள்?

image

தி.மலை மக்களே, தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டிச.19 ஆம் தேதி காலை 10 மணி முதல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இந்த முகாமில் 8th, 10th, +2, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும், விவரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!