News December 13, 2025
பெரம்பலூர்: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டன. சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தப்பட்ட இந்த வாகனங்கள், நீதிமன்ற உத்தரவின்படி பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் மூலம் விற்கப்பட்டன. இந்த ஏலத்தில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு, குறைந்த விலைக்கு வாகனங்களை வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 17, 2025
பெரம்பலூர்: கிளைச் சிறையில் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் கிளைச் சிறையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, பெரம்பலூர் கிளைச் சிறையில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவை தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் காவல் கண்காணிப்பாளருடன் நேற்று (டிச.16) மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.16) இரவு 10 மணி முதல் இன்று(டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!