News December 13, 2025

திருவண்ணாமலை: ஓசி பீடி குடுக்க மறுத்தவருக்கு பிளேடால் வெட்டு

image

ஆரணி அருகே கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கல்யாணசுந்தரம் அருணகிரிசத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்திருந்தார். அப்போது, சரவணயுவராஜ் பீடி கேட்டுள்ளார். கல்யாணசுந்தரம் ‘பீடி இல்லை’ என்று மறுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணயுவராஜ், தான் வைத்திருந்த பிளேடால் கல்யாணசுந்தரத்தின் முதுகில் வெட்டியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News December 16, 2025

தி.மலை: கடன் பெற சிறப்பு முகாம்; மிஸ் பணியாதீங்க!

image

தமிழ்நாடு சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகங்கள் மூலம் கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. டிச.22ல் தி. மலை, வந்தவாசி தாலுகா அலுவலகங்களிலும், 23ல் செய்யாறு, போளூர் தாலுகாவிலும், 24ல் சேத்துப்பட்டு, கலசபாக்கம் தாலுகா அலுவலகங்களிலும், 26ல் ஆரணி, செங்கம் தாலுகா அலுவலகங்களிலும், 29ல் தண்டராம்பட்டு தாலுகாவிலும் நடைபெற உள்ளது.

News December 16, 2025

தி.மலை: பால் லாரி மோதி கோர விபத்து; சம்பவ இடத்திலேயே பலி

image

சென்னையை சேர்ந்த சந்தோஷ்குமார்(38), கார்த்திக்(35), முனிவேல் (36) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் பருவதமலைக்கு சென்றனர். அப்போது, சேத்துப்பட்டு அருகே கோழிப்புலியூர் கூட்ரோடு பகுதியில் சென்றபோது எதிரே வந்த பால் லாரி இவர்கள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில், சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கார்த்திக், முனிவேல் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

News December 15, 2025

தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

தி.மலை, இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இரவு வேலைக்கு செல்லும் ஆண், பெண்களுக்கு உதவும்.

error: Content is protected !!