News December 13, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ம் நாளினை நினைவுகூரும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் டிச.17 – டிச.26 வரை ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது. அரசு வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்கள், வணிகர் சங்கங்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகள் இதில் கலந்துக் கொள்ளுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கலில் இருந்து நாளை (புதன்) முதல் வரும் திங்கள்கிழமை வரையிலான நாட்களுக்கு காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் நாமக்கலில் இருந்து பெங்களூரூ, மைசூரு, ஹூப்ளி போன்ற பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
News December 16, 2025
நாமக்கல்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

நாமக்கல் மாவட்ட மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
News December 16, 2025
ப.வேலூரில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

பரமத்தி வேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே டீ கடைகளில் லாட்டரி விற்பனை செய்வதாக போலீஸ்காரருக்கு தகவல் கிடைத்தது இதன் பெரிய டிஎஸ்பி சங்கீதா உத்தரவின் படி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் டீக்கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக கண்ணன் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


