News December 13, 2025
பட்டாவில் வருகிறது மாற்றம்.. கூடுதல் விவரங்கள் சேர்ப்பு

தற்போது வழங்கப்படும் பட்டாவில் தாலுகா, கிராமம், உரிமையாளர் பெயர், சர்வே எண் உள்ளிட்ட பிரிட்டிஷ் கால விவரங்கள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன. தற்போதைய நடைமுறைகள் இல்லாததால் குழப்பங்கள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதை களையும் நோக்கில் விற்பனை பத்திர எண், சொத்தின் எல்லைகள், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பட்டாவில் சேர்ப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 25, 2025
அதிமுகவின் அடிமடியில் கைவைக்கிறதா பாஜக?

TN-ல் இம்முறை குறைந்தபட்சம் 15 இடங்களையாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது பாஜக. இதற்காக அதிமுகவின் சிட்டிங் தொகுதிகளை (20) அக்கட்சி குறிவைத்திருக்கிறதாம். குறிப்பாக, மேட்டுப்பாளையம், அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், கோவை வடக்கு, சிங்காநல்லூர் & திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக – பாஜக சீட் பஞ்சாயத்து சூடுபிடித்துள்ளது.
News December 25, 2025
ஜெலென்ஸ்கியின் புதிய திட்டம்: முடிவுக்கு வருமா போர்?

உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர, ஜெலென்ஸ்கி 20 அம்ச அமைதி திட்டத்தை முன்வைத்துள்ளார். USA உடன் இணைந்து உருவாக்கிய இந்த திட்டத்தில், நேட்டோ நாடுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உத்தரவாதத்தை உக்ரைன் கோரியுள்ளது. டான்பாஸ் பகுதியில் சுதந்திர பொருளாதார மண்டலம், மறுசீரமைப்புக்கு நிதி உள்ளிட்டவையும் திட்டத்தில் கோரப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டம் புடினின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
News December 25, 2025
களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் (PHOTOS)

இறை பாலகன் இயேசுவின் பிறப்பை கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தேவாலயங்கள் மின்விளக்குகளால் ஜொலிக்க, சிறப்பு பிரார்த்தனைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். சாண்டா கிளாஸ்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான பரிசுகளை வழங்கி வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர். உலகெங்கும் களைகட்டியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சில பிரத்யேக புகைப்படங்களை மேலே SWIPE செய்து பாருங்க..


