News December 13, 2025
டி20 -ல் சாதனை.. ஒரே போட்டியில் 7 விக்கெட்கள்

பஹ்ரைன் வேகப்பந்து வீச்சாளர் அலி தாவூத், டி20-ல் வரலாற்று சாதனை படைத்துள்ளார். பூடானுக்கு எதிரான போட்டியில், 19 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம், டி20-ல் அதிக விக்கெட்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில், மலேசிய வீரர் ஷியஸ்ருல் இத்ருஸ் (7/8) முதலிடத்திலும், சிங்கப்பூர் வீரர் ஹர்ஷா பரத்வாஜ் (6/3) 3-ம் இடத்திலும் உள்ளனர்.
Similar News
News April 10, 2026
வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 உயர்ந்தது

தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையும் இன்று (ஏப்.10) உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹265-க்கும், 1 கிலோ வெள்ளி ₹5,000 அதிகரித்து ₹2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. நேற்று ₹5,000 குறைந்த நிலையில், இன்று ₹5,000 உயர்ந்துள்ளது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News April 10, 2026
உதயநிதியுடன் எல்.முருகன் கூட்டு: ஆதவ் அர்ஜுனா

‘ஜனநாயகன்’ படத்தை உதயநிதியுடன் சேர்ந்து எல்.முருகன் முடக்கியதாக ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார். எல்.முருகன் வீட்டில் நடந்த பொங்கல் விழாவுக்கு பராசக்தி படக்குழுவை அனுப்பிவைத்தது உதயநிதி என சாடிய அவர், விஜய்யை மிரட்டும் வகையிலும், மிகப்பெரிய இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் படத்தை வெளியிட்டுள்ளனர்; திமுகவினர் எம்ஜிஆருக்கும் இதேபோன்ற நெருக்கடிகளை கொடுத்தனர் என விமர்சித்துள்ளார்.
News April 10, 2026
எண்ணெய் கப்பல்களை தடுக்க முடியாது: டிரம்ப் சவால்

ஹார்முஸ் நீரிணையை கடக்க ஈரான் சுங்கக் கட்டணம் விதித்ததற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் இல்லாமலும் எண்ணெய் விநியோகம் சீராக எப்படி நடக்கிறது என்பதை அனைவரும் பார்ப்பீர்கள் என்ற அவர், என்னை பொறுத்தவரையில் ஈரான் இருந்தாலும் ஒன்றுதான், இல்லையென்றாலும் ஒன்றுதான் என்றார். அந்நாட்டை அணு ஆயுதம் தயாரிக்க முடியாமல் தடுத்ததும் நான் தான் என்று டிரம்ப் கூறியுள்ளார்.


