News December 13, 2025
‘படையப்பா’ படத்தின் Bare-Body சீன் பற்றிய சுவாரஸ்யம்

‘படையப்பா’ படத்தில் வரும் Bare-Body சீன் குறித்து சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். வெற்று உடம்போடு நடிக்க போவதாக ரஜினி சார் சொன்னார். அது கேவலமாக இருக்கும் என்று சொன்னேன். அதை கேட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் சென்றவர், அந்த சீனில் நடித்தார். அதை பார்த்து பிரமிப்பு அடைந்தபோது, சின்ன வயசுல மூட்டை தூக்கி வளந்த உடம்பு இது என ரஜினி கூறியதாக கனல் கண்ணன் நினைவுகூர்ந்துள்ளார்.
Similar News
News December 22, 2025
போனில் சத்தம் கம்மியா கேட்குதா? Simple Solution!

உங்கள் Android போன் பழசானதால் சத்தம் கம்மியா கேக்குதா? இந்த சிம்பிளான டெக்னிக் மூலம் அதை சரி செய்யலாம். ➤Settings-க்கு செல்லுங்கள் ➤அதில் ‘Sounds and vibration’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும் ➤’Sound quality and effects’ என்ற ஆப்ஷன் காட்டும் ➤அதில் ‘Dolby Atmos/Super Audio’ என்ற ஆப்ஷனை ON செய்யுங்கள் ➤பின்னர் ஹெட்போன்/ஸ்பீக்கரை கனெக்ட் செய்தால் ஆடியோ தரமாக கேட்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 22, 2025
பொங்கலுக்கு முன்.. புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு

விரைவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட இருப்பதால், அதற்குள் புதிய ரேஷன் கார்டு தங்களுக்கு கிடைத்துவிடாதா என லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தேதி வாரியாக முன்னுரிமை கொடுக்கப்பட்டு பரிசீலிக்கப்படுகின்றன. அனைத்து தகவல்களும் சரியாக இருந்தால், அதிகபட்சமாக ஒரு வாரத்தில் ரேஷன் கார்டு கைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News December 22, 2025
வங்கதேசம் பக்கம் வரவே மாட்டேன்: ஹசீனா

ஷேக் ஹசீனா மீது வழக்குகள் இருப்பதால் அவர் வங்கதேசத்துக்கு திரும்பவேண்டும் என அழைப்பு வருகிறது. ஆனால், தனக்கு எதிரான தண்டனையானது, அரசியல் ரீதியான பழிவாங்கல் போல இருப்பதால், அந்நாட்டிற்கு செல்ல அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். நாட்டிற்கு திரும்புமாறு தன்னை யாராலும் கட்டாயப்படுத்த முடியாது என்ற அவர், வங்கதேசத்தில் முறையான அரசு அமைந்த பிறகே நாட்டிற்கு திரும்புவேன் என கூறியுள்ளார்.


