News December 13, 2025

விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி விவரம்!

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

Similar News

News December 26, 2025

விழுப்புரம்: முதல்வரை வரவேற்ற மாவட்ட செயலாளர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க எல்லையில் தெற்கு மாவட்ட செயலாளர் கௌதமசிகாமணி இன்று(டிச.26) வரவேற்றார்.
உடன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் சலாம், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News December 26, 2025

விழுப்புரம்: உங்கள் வீட்டிற்கு பட்டா இல்லையா?- CLICK HERE

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 26, 2025

விழுப்புரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் 2026 வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெறுகிறது. டிச.27, ஜன.03 (சனி) மற்றும் டிச.28, ஜன.04 (ஞாயிறு) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெறவுள்ளது. புதிய சேர்ப்பு, திருத்தம், நீக்கம் செய்ய பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!