News December 13, 2025
விரைவில் ஜனநாயகன் டீசர்?

ஜன.9-ல் பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகவுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ லாஞ்ச் டிச.27-ல் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக படத்தின் 2-வது பாடல் & டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ‘தளபதி கச்சேரி’ மேலும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், இப்படத்தின் பாடல்கள் தெறிக்கவிடும் விதமாக அமைந்துள்ளதாக அனிருத்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
Similar News
News December 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 551 ▶குறள்:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
▶பொருள்: அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
News December 16, 2025
சுந்தர் பிச்சை பொன்மொழிகள்

*உங்கள் கனவுகளை நம்பி, அவற்றை விரும்பி வாழுங்கள். அதுவே வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி. * உங்கள் திறன்களை தினமும் வளர்த்து கொள்ளுங்கள், தினந்தோறும் புதியது ஒன்றை கற்றுக்கொள் முயற்சி செய்யுங்கள். *உண்மையான தலைவர்கள் என்பவர்கள் தங்கள் சொந்த வெற்றியை பற்றி மட்டுமல்ல, சுற்றியுள்ளவர்களின் வெற்றியைப் பற்றியும் சிந்திப்பார்கள். *ஆர்வத்தோடு கற்றுக்கொள்வது உங்கள் வெற்றிக்கு வழி காட்டும்.
News December 16, 2025
CINEMA 360°: MS சுப்புலட்சுமி பயோ பிக்கில் சாய் பல்லவி

*விக்ரம் பிரபு நடித்துள்ள ‘சிறை’ படத்தின் 2-வது பாடல் இன்று வெளியாகிறது. *எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. * விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் நீளம் 3 மணி நேரம் 6 நிமிடங்கள் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. *சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் ZEE 5 நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது.


