News December 13, 2025

மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீருடன் இரங்கல்

image

கிளிகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த <<18542461>>’பறவை மனிதர்’<<>> ஜோசப் சேகரின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த இந்த மாமனிதரின் இறுதிக்காலம் மகிழ்ச்சியாக அமையவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜோசப் சேகர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவரது இழப்புக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

Similar News

News April 8, 2026

முதல்வர் வேட்பாளர்கள் மனைவியிடம் உள்ள தங்கம்!

image

CM வேட்பாளர்களாக களத்தில் உள்ளவர்கள் மற்றும் அவர்களது மனைவியிடம் எவ்வளவு தங்கம் உள்ளது என்பதைப் பார்க்கலாம். ஸ்டாலினிடம் தங்கம் இல்லை; அவரது மனைவி துர்காவிடம் 720 கிராம்(g) உள்ளது. EPS-யிடம் 100g, அவரது மனைவி ராதாவிடம் 720g தங்கம் உள்ளது. சீமானிடம் 150g, அவரது மனைவி கயல்விழியிடம் 1,600g, விஜய்யிடம் 883g, அவரது மனைவி சங்கீதாவிடம் 3,132g தங்கம் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

News April 8, 2026

புதுச்சேரி தேர்தல்.. வாக்காளர்களே ரெடியா

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக EC தெரிவித்துள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், 30 தொகுதிகளுக்கு 918 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. EVM இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் சுமார் 4,000 ஊழியர்களும், 45 கம்பெனி துணை ராணுவப் படையினரும் ஈடுபடவுள்ளதாக EC கூறியுள்ளது.

News April 8, 2026

யாரை ஏமாற்றுகிறார் மோடிஜி? பிரகாஷ்ராஜ்

image

முத்ரா திட்டத்தில் இதுவரை 52 கோடிக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாக PM மோடி குறிப்பிட்டிருந்தார். இதை விமர்சித்துள்ள பிரகாஷ் ராஜ், 150 கோடி மக்கள் தொகையில், வேலை தேடும் 52 கோடி பேர் தொழில்முனைவோராக, பிசினஸ் ஓனர்களாக மாறிவிட்டார்களா? மோடிஜி யாரை ஏமாற்றுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!