News April 29, 2024
IPL: புதிய சாதனை படைத்தார் எம்.எஸ்.தோனி

ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், CSK வீரர் தோனி புதிய சாதனை படைத்துள்ளார். சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ஹைதராபாத் அணி, 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிப் போட்டிகளில் பங்காற்றிய வீரர் என்ற புதிய மைல் கல்லை அடைந்தார் எம்.எஸ்.தோனி. மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் ஒருமுறைகூட அவுட்டாகாத வீரர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார்.
Similar News
News August 15, 2025
இடஞ்சுழி எழுத்துகள் தெரியுமா?

ட, ய, ழ ஆகியவை இடஞ்சுழி எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை எழுதும்போது கையை இடதுபுறமாக வளைத்து (அ) சுழித்து எழுதுவதால் இடஞ்சுழி எழுத்துகளாகும். மாறாக இடதுபக்கம் இருந்து வலப்பக்கம் சுழித்து எழுதப்படுபவை வலஞ்சுழி எழுத்துகளாகும். உ-ம்: அ, எ, ஔ, ண, ஞ ஆகியவை. தமிழ் எழுத்துகளில் பெரும்பாலானவை வலஞ்சுழி எழுத்துகளாகவே உள்ளன. உ-ம்: அ, ஆ, இ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஓ, ஒள, க, ச, ஞ, ண, த, ந, ம, ல, வ, ழ,ள, ன.
News August 15, 2025
ஆக.19-ம் தேதி இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அணித் தேர்வு கூட்டம் முடிந்தபின், அஜித் அகர்கர் அணியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தேசமான அணி விவரம்: அபிஷேக், சாம்சன், சூர்யா, திலக், ஹர்திக், கில், துபே, அக்சர், சுந்தர், வருண், குல்தீப், பும்ரா, அர்ஷ்தீப், ஹர்ஷித் / பிரசித், ஜிதேஷ்/ஜுரெல் ஆகியோர். உங்கள் கணிப்பு யார் யார்?
News August 15, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 15 – ஆடி 30 ▶ கிழமை: வெள்ளி ▶ நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.