News December 12, 2025

மகளிர் உரிமைத் தொகை உயர்வு: ஸ்டாலின் அறிவிப்பு

image

மகளிர் உரிமைத்தொகை 2-ம் கட்ட விரிவாக்கத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை உயரும், மகளிரின் உரிமையும் உயரும் என தெரிவித்துள்ளார். இதன்படி, ₹1,000 உரிமைத்தொகையை விரைவில் உயர்த்தி வழங்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, 2026 தேர்தலையொட்டி, ₹2,000 – ₹2,500 வரை உரிமைத் தொகையை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

Similar News

News December 17, 2025

தங்கம் விலை மளமளவென மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $6.20 உயர்ந்து, $4,312.09-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வரும் நிலையில், நேற்று (டிச.16) சவரன் ₹98,800-க்கு விற்பனையானது.

News December 17, 2025

மெஸ்ஸிதான் குற்றவாளி: சுனில் கவாஸ்கர்

image

கொல்கத்தாவில் நடைபெற்ற <<18551245>>மெஸ்ஸியின் <<>>நிகழ்ச்சி பெரும் கலவரத்தில் முடிந்தது. இதனையடுத்து ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஏற்பாட்டாளர்கள் மீது பழி சுமத்துவது தவறு என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரம் இருப்பதாக ஒப்புக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றிய மெஸ்ஸிதான் உண்மையான குற்றவாளி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News December 17, 2025

SPORTS 360°: சிங்க பெண்களுக்கு காரை பரிசாக வழங்கிய டாடா

image

*துபாயில் நடந்த இன்டர்கான்டினென்டல் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பைஜான் அன்வர், ரஷ்ய வீரரை வீழ்த்தி பட்டத்தை வென்றார். *மகளிர் உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடத்திய டாட்டா நிறுவனம், அனைவருக்கும் டாடா சியாரா காரை பரிசாக வழங்கியது. *உலக டூர் இறுதிச்சுற்று பேட்மிண்டன் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்குகிறது.

error: Content is protected !!