News April 29, 2024
ஒரே நாளில் 26 வழக்குகள் பதிவு

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 28) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 137 மதுபாட்டில்கள், 160 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 26 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 18, 2025
வேலூர்: மக்கள் நலவாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேலூர் மாநகராட்சியில் செவிலியர், லேப் டெக்னீசியன், பார்மாஸிஸ்ட், எம்எல்ஹெச்பி, ஹெல்த் இன்ஸ்பெக்டர், UHN, MPHW கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆக.29ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் <
News August 18, 2025
திருவள்ளுவர் பல்கலை.யில் நாளை பட்டமளிப்பு விழா

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை (ஆக.19) பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் மற்றும் பல்கலைத்துறை அமைச்சர் பங்கேற்க உள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர், பேராசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் அனைவரும் பெரும் உற்சாகத்துடன் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர்.
News August 18, 2025
வேலூர்: VIT பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

வேலூரில் உள்ள VIT பல்கலைக்கழகத்தின் 40வது பட்டமளிப்பு விழா நேற்று(ஆக.17) சிறப்பாக நடைபெற்றது. இதில் பல துறைகளில் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்றனர். விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். பல்கலைக்கழக வேந்தர், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.