News December 12, 2025
கரூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி!

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல். இ.ஆ.ப., தலைமையில் இன்று (12.12.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், முதற்கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தார்.
Similar News
News December 15, 2025
கரூர் அருகே அதிரடி கைது..!

கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே வடக்கு மேட்டுப்பட்டி மந்தையில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய தகவலின் பேரில் வெள்ளியணை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சத்யராஜ் (26), குமார் (35), நவீன் (26) ஆகிய மூவரையும் கைது செய்து, 52 சூதாட்ட சீட்டுகள் மற்றும் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
News December 15, 2025
கரூர்: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

கரூர் மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை SHARE பண்ணுங்க!
News December 15, 2025
கரூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும்.


