News December 12, 2025

செங்கல்பட்டு: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 13, 2025

செங்கல்பட்டு: கண்டோன்மெண்ட் ஊழியரை தாக்கிய 3 பேர்

image

பல்லாவரம்-பரங்கிமலை கண்டோன்மென்ட் பகுதி, திரிசூலத்தில், ஜெயகுமாரி என்பவர் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்திருந்தார். நிர்வாகத்தின் நோட்டீஸுக்கு பிறகும் இணைப்பு துண்டிக்கப்படாததால், ஊழியர்கள் அதைத் துண்டிக்கச் சென்றனர். அப்போது, ஜெயகுமாரியின் மகன்களான ஜெயபால், பார்த்திபன் & ஜெயக்குமார் ஆகியோர் கண்டோன்மென்ட் ஊழியர்களை கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கியுள்ளனர். இதனால் 3மகன்களையும் கைது செய்தனர்.

News December 13, 2025

செங்கல்பட்டு: நடந்து சென்ற வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்!

image

மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ரிஸ்வான் (23 வயது). இவர் சண்முகம் சாலையில் உள்ள ஒரு கைபேசி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, முகமது ரிஸ்வான் காந்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​அடையாளம் தெரியாத ஒருவர் அவரைத் கட்டையால் தலையில் தாக்கி, அவரிடமிருந்த கைபேசி மற்றும் 400 ரூபாயைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

News December 13, 2025

செங்கல்பட்டு: சிகிச்சைக்காக விமானத்தில் வந்த பெண் மரணம்!

image

வங்காளதேச டாக்காவிலிருந்து வந்த விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதில் நுரையீரல் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற வந்த 32 வயதான அக்லிமா அக்தர் என்ற பெண் பயணி விமானம் சென்னை வான் எல்லையில் வந்தபோது திடீரென மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். விமானம் தரையிறங்கியதும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்ததில், அவர் இருக்கையிலேயே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!