News December 12, 2025
தருமபுரி மாவட்டத்திற்கு முதலிடம்!

தருமபுரி மாவட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான சிறந்த செயல்திறன் விருதுகளை சென்னை ஓமந்தூராரில், இன்று (டிச.12) சுகாதார அமைச்சரிடமிருந்து பெற்றுள்ளது. 95:95:95 என்ற இலக்கை அடைந்ததில், எச்ஐவி எய்ட்ஸ் கட்டுப்பாட்டில் தருமபுரி முதலிடம் பிடித்துள்ளது. மேலும் கூடூ தொண்டு நிறுவனம் – தருமபுரி, தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், இணைப்புப் பணியாளர்கள் திட்டத்திலும் முதலிடம் பெற்றுள்ளனர்.
Similar News
News March 8, 2026
தருமபுரி : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 8, 2026
தருமபுரி : மகளிருக்கு இந்த எண்கள் அவசியம்!

தருமபுரி மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 8, 2026
ஆரூரில் போட்டியிட விருப்ப மனு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையில் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகி கவிதா மோகன்தாஸ் அரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.


