News December 12, 2025
தினமும் 20 மாத்திரைகள் சாப்பிடுகிறேன்: மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன், மனநல ஹாஸ்பிடலில் உள்ளார். இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்துசெய்ய கோரி, அவர் சென்னை HC-ல் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஊட்டச்சத்து குறைபாடால் தினமும் 20 மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால், தற்போது வழக்கை எதிர்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி விசாரணை நீதிமன்றத்தில் தான் மனு தாக்கல் செய்ய முடியும் எனக் கூறிய சென்னை HC, மனுவை தள்ளுபடி செய்தது.
Similar News
News April 11, 2026
சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

சேலம் செவ்வாய்பேட்டையில் காஜாஷெரீப் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடையில், ஊழியராகப் பணியாற்றி வந்த ஆயிஷா பேகம் என்பவர் சிறுகச் சிறுக தங்கத்தை திருடியதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருட்டு உறுதியானதையடுத்து ஆயிஷா பேகம்(25), அவரது கணவர் தஸ்தகீர் (33), மாமியார் மும்தாஜ் (53) மற்றும் பாபு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
News April 11, 2026
அன்று தாராபுரத்தில் எம்ஜிஆர்… இன்று எடப்பாடியில் விஜய்!

1977 தேர்தலில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. ஆம்! தாராபுரம் அதிமுக வேட்பாளர் அய்யாசாமிக்கும், எம்ஜிஆருக்கும் கடைசி நேரத்தில் முரண்பாடு ஏற்பட்டது. இதனால், சுயேச்சையை ஆதரித்த MGR, இரட்டை இலைக்கு எதிராகவும், சிங்கம் சின்னத்திற்கு ஆதரவாகவும் பரப்புரை செய்தார். ஆனால், மக்களோ! இரட்டை இலையை வெற்றிபெற செய்தனர். அதேபோல், தற்போது <<19620700>>எடப்பாடியில் <<>>சுயேச்சையை ஆதரிக்கவிருக்கும் விஜய்க்கு என்ன நடக்கும்?
News April 11, 2026
CSK-வுக்கு மீண்டும் இந்த மோசமான சாதனை வேண்டாம்

நடப்பு சீசனில் விளையாடிய 3 போட்டிகளிலுமே தோல்வியடைந்த CSK அணி, 2022 சீசனின் மோசமான சாதனையை படைக்காது என ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். ஏனென்றால், அந்த சீசனில் முதல் 4 லீக் ஆட்டங்களிலும் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. அதேநேரம், கடைசியாக ஹோம் கிரவுண்டில் விளையாடிய 6 போட்டிகளில் அணி தோல்வியுற்றது. இன்றைய DC-க்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை மஞ்சள் படை ருசிக்குமா என்பதை பார்க்கலாம்.


