News December 12, 2025
திருப்பரங்குன்றத்தால் திருப்பம் வரும்: நயினார்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்குவங்கிக்காகவே கோர்ட் தீர்ப்பை திமுக மதிக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கருத்து கணிப்புகளில் கூட திமுக ஆட்சி மிகவும் பின் தங்கியுள்ளதாக கூறிய அவர், 2026 தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தான் வெற்றிபெறும் என்று குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தால், இந்த ஆட்சிக்கே திருப்பம் வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 26, 2025
மதவெறியர்களின் அட்டூழியங்கள்: சீமான்

வடமாநிலங்களின் சில பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழாக்களில் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மதவெறியர்களின் அட்டூழியங்களை ஒருநாளும் அனுமதிக்க முடியாது என்று சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமிய பெருமக்கள் மீது தொடரும் மதவெறி தாக்குதல் எல்லாம் திட்டமிடப்பட்ட இன ஒதுக்கல் கோட்பாட்டின் செயல் வடிவமே என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News December 26, 2025
இது காட்டுமிராண்டித்தனம்: ஜான்வி கபூர்

எந்தவொரு நிலையிலும் தீவிரவாதம் மனிதநேயத்தை மறப்பதற்கு முன்பு அதை கண்டித்து எதிர்க்க வேண்டும் என்று ஜான்வி கபூர் உணர்ச்சிபொங்க கூறியுள்ளார். வங்கதேசத்தில் இந்து இளைஞர் சிபு சந்திர தாஸ் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் நடப்பது காட்டுமிராண்டித்தனமானது என்றும் அவர் காட்டமாக கண்டித்துள்ளார்.
News December 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை ▶குறள் எண்: 561 ▶குறள்: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. ▶பொருள்: நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.


