News December 12, 2025
தேனி: பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை

கதிர்நரசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் போதுமணி (43). இவருக்கு சில வருடங்களாக மனநிலை பாதித்த நிலையில் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போதுமணியின் கணவர் தோட்டத்துக்காக பூச்சி மருந்து வாங்கி வைத்திருந்த நிலையில் அதனை போதுமணி குடித்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.11) உயிரிழந்தார். ராஜ்தானி போலீசார் வழக்கு பதிவு.
Similar News
News December 13, 2025
தேனி: ஏலக்காய் வியாபாரிக்கு கொலை மிரட்டல்!

போடி சடையாண்டி தெருவை சேர்ந்த சதீஸ்குமாரும், சந்தைப்பேட்டை தெருவை சோ்ந்த நவீன்குமாரும் சோ்ந்து ஏலக்காய் வியாபாரம் செய்து வந்தனா். இந்நிலையில் நவீன்குமாா், சதீஸ்குமாரிடம் 500 கிலோ ஏலக்காய்களை வாங்கியுள்ளார். இதற்கான பணத்தை சதீஸ்குமாா் கேட்ட போது ஏற்பட்ட பிரச்சனையில் நவீன்குமாா், சதீஸ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போடி போலீஸாா் நவீன்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை.
News December 13, 2025
தேனி: அரசு வேலை வேண்டுமா.. இங்க போங்க

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் மத்திய அரசு நடத்தும் SSC, Bank, Railway ஆகிய தேர்வுகளுக்கு நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் டிச.15 ம் (திங்கள்) தேதி தொடங்குகிறது. பயிற்சிக்கும் வரும் தேர்வர்களுக்கு கட்டணமில்லா பாடக்குறிப்பு, மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE IT
News December 13, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (12.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.


