News December 12, 2025

கரூர் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து; இளைஞர் பலி

image

கரூர் வேலாயுதபாளையம் அருகே குட்டைக்கடை சாலையில் அபிஷேக் என்பவர் இயக்கிய ஆம்புலன்ஸ் வேகமாக சென்றபோது கட்டுப்பாடு இழந்து தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அபிஷேக், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வேலாயுதபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 8, 2026

கரூர்: இனி ஆதார் திருத்தங்கள் EASY

image

கரூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணு

News April 8, 2026

கரூர்: அதிமுகவில் ஐக்கியம்

image

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகினர். பின்னர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். தேர்தல் நேரத்தில் இந்த இணைப்பு மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

News April 8, 2026

சர்வதேச கடல் தூதராக கரூர் மாணவர் தேர்வு

image

இங்கிலாந்தின் ‘மாண்டா டிரஸ்ட்’ அமைப்பு, கரூரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அத்வைத் கௌசிக்கை சர்வதேச சமுத்திர தூதராகத் தேர்ந்தெடுத்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்ற 2,000 மாணவர்களில் தேர்வான 23 பேரில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மாணவர் இவராவார். ‘ப்ராஜெக்ட் ப்ளூ’ என்ற தளத்தை உருவாக்கிய அத்வைத்,தற்போது கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் புதிய கருவியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

error: Content is protected !!