News December 12, 2025
புதுவை: மானிய விலையில் வான்கோழிகள்

கால்நடைத்துறை இயக்குநர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறையின் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனைகளில் வான்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ், 6 வார வான்கோழிகள் 50 சதவீத மானிய விலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. கால்நடை மருந்துவமனையை அணுகி விண்ணப்பித்து பயன் பெறலாம்.” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 26, 2025
புதுச்சேரி வேளாண் துறை மூலமாக சிறப்புப் பயிற்சி

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலமாக ஆத்மா திட்டத்தின் வாயிலாக நெல்லில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சமீபத்திய உத்திகள் குறித்த பயிற்சி மதகடிப்பட்டில் நேற்று நடைபெற்றது. இதில் துணை வேளாண் இயக்குநர் ராஜ்குமார் வழிகாட்டுதலின்படி, வேளாண் அலுவலர் நடராஜன் விவசாயிகளை வரவேற்று, தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விளக்கினார்.
News December 26, 2025
புதுச்சேரியில் கேரளா மாணவர் கைது!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக போலி கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தபோது அவை உண்மையற்றவை என்பது உறுதியானதாகத் தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து புதுச்சேரி போலீசார், அந்த மாணவனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 26, 2025
மூன்று மாநில நிலப்பகுதிகளால் சூழப்பட்ட புதுவை

புதுவை என அழைக்கப்படும் புதுச்சேரி, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் உள்ளிட்ட நான்கு பகுதிகளை உள்ளடக்கியது. இதில், புதுச்சேரியும், காரைக்காலும் தமிழ்நாடு மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. மாகே கேரளா மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. ஏனம் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. SHARE IT NOW…


